தஞ்சாவூர்: ஆன்மீக நகரங்களை இணைப்பதற்காக மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று வசதிகள் செய்து தரப்படும் என்றும் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
இதையடுத்து தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த அதிமுக அரசால் தஞ்சாவூருக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது, அதேபோல் மத்திய பாஜக அரசால் தஞ்சைக்கு ரூபாய் 94 கோடி மதிப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தஞ்சை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டது, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு மருத்துவமனை ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து ரூபாய் ஆயிரம் கோடி பெற்று பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என்று வேட்பாளர் கருப்பு முருகானந்தம் உறுதி அளித்தார்.