புதுடில்லி: மலையாள திரையுலகின் பிரபல நடிகரும் தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மூத்த நடிகர் சலீம் குமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது புகழ்பெற்ற திரைப்பயணத்தில், அவர் தனது பன்முகத்தன்மையாலும், பல்வேறு வேடங்களில் வழங்கிய மறக்கமுடியாத நடிப்பாலும் முத்திரை பதித்தார்.
இந்த துயர நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது வென்ற நடிகரான சலீம் குமார், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.