அமெரிக்கா: தேர்தல் முறைகேடு குறித்த கேள்விக்கு ஆதாரம் வழங்க முடியாமல், என்.பி.சி. நேர்காணலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப், என்.பி.சி. தொலைக்காட்சியின் ‘Meet the Press’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தொகுப்பாளருடன் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கலிபோர்னியா தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டு தொகுப்பாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கான உறுதியான ஆதாரத்தை டிரம்ப் வழங்கவில்லை.
இதையடுத்து, தொகுப்பாளரை “நேர்மையற்றவர் அல்லது முட்டாள்” என விமர்சித்த டிரம்ப், ஊடக நிறுவனங்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார். பின்னர், “இதோடு நிறுத்திக்கொள்வோம்” என்று கூறிய அவர், நேர்காணலை பாதியில் முடித்துவிட்டு வெளியேறினார். இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.