சிவகாசி: திமுகவின் தற்போதைய அரசியல் நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், திமுக மற்றும் அதன் தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
“திமுக தோல்விக்கான காரணங்களை மறைக்க காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறது. கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகின்றனர்” என்றார்.
மேலும், “விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளில் உதயநிதி முக்கிய பங்காற்றினார். உதயநிதி தலைமையில் திமுக வருங்காலங்களில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும்” எனவும் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் முதல்வர் விஜய் இடையிலான நல்லுறவு தொடரும் என்றும், கூட்டணி ஆட்சியும் நேர்மையான ஆட்சியும் காங்கிரஸின் இரு கண்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.