ஹரியானா: ஹரியானா மற்றும் சண்டிகர் அரசு துறைகளின் வங்கி கணக்குகளில் நடந்ததாக கூறப்படும் ரூ.661 கோடி முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
ஹரியானா மற்றும் சண்டிகர் அரசு துறைகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.661 கோடி முறைகேடாக மாற்றப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில், அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இணைந்து போலி கணக்குகளுக்கு அரசு நிதியை மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் ரிபவ் ரிஷி மற்றும் ஹரியானா மின் உற்பத்தி கழக இயக்குநர் அமித் திவான் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் நொய்டா, சண்டிகர் உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.