திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா தேரோட்டம் நடந்தது. இதில் மகாரதத்தை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவியருடன் மகாரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை, நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.