சென்னை: ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் இந்த வெற்றிலையானது மிகவும் நல்லது என்பதால், வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வைத்து வளர்க்கலாம். ஆனால் துளசி செடியை எப்படி பயபக்தியோடு பராமரிக்க வேண்டுமோ அதேபோல் வெற்றிலை கொடியையும் பராமரிக்க வேண்டும் என்ற விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், கடன் பிரச்சனை தீரவும், செல்வ செழிப்பு மேலோங்கி கொண்டே செல்லவும், முறைப்படி வெற்றிலை கொடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டில் தோட்டம் இருந்து, இடவசதி இருந்தால் தோட்டத்திலேயே ஈசானிய மூலையில் அதாவது, வடகிழக்கு மூலையில் வெற்றிலை கொடியை வைத்துக்கொள்ளலாம். வீட்டில் இடம் இல்லாதவர்கள் கொஞ்சம் பெரிய அளவு தொட்டியாக வாங்கி வைத்து, வீட்டிற்குள்ளேயே ஈசானிய மூலையில் அந்த தொட்டியை வைத்து வெற்றிலை கொடியை வளர்த்து வரலாம். வெற்றிலை கொடியை பதியம் போடுவதற்காக பள்ளம் தோண்ட வேண்டும் அல்லவா? அப்படி தோண்டப்படும் பள்ளத்திற்குள் மூன்று 1 ரூபாய் நாணயங்களை, போட வேண்டும்.
அதன் பின்பு சிறிதளவு மஞ்சள், குங்குமத்தையும் போட வேண்டும். இப்படி மஞ்சள் குங்குமத்தை போடும்போது மகாலக்ஷ்மியை மனதார நினைத்துக் கொள்வது அவசியம். ஒரு பௌர்ணமி தினத்தில் வெற்றிலை கொடியை பதியம் போடுவது மிகவும் சிறப்பானது. –
இந்த வெற்றிலைக் கொடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும்போதும் மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வெற்றிலைக் கொடிகள் வளர்ந்து தழைத்து எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டின் செல்வ வளமும் வற்றாமல் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.