திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று 3 நாட்கள் நடந்த சிறப்பு பூஜைகளுக்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மன்னரின் பிறந்தநாளான 30-ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தந்திரி பிரம்மதத்தர் முன்னிலையில் லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வரும் 15-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.