புதுடெல்லி: இன்று மகா சிவராத்திரியை ஒட்டி அதிகாலை முதலே நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
இதே போல் காசி, நாசிக் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.