நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. பத்து நாள் நடைபெறும் திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்க பக்தர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.