உத்திரபிரதேசம் : கோலாகலமாக தொடங்கிய மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு அடைகிறது. மற்ற நாட்களில் தினசரி வந்த பக்தர்களின் எண்ணிக்கை விட இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் லட்சக்கணக்கில் நீராட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் அதிகமான பொதுமக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் நீராட வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.