தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற விஜய கோதண்ட ராமர் கோயிலில் இன்று முதல் ராமநவமி உற்சவம் தொடங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது விஜய கோதண்டராமர் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ராமநவமி விழா இன்று 6ம் தேதி தொடங்கி வரும் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவ நாட்களில் விஜய கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், ஆராதனை ஆகியவை நடக்க உள்ளது. இக்கோயிலுக்கு பூதலூர் மட்டுமின்றி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.