சென்னை: ‘அறம்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கவனம் பெற்ற ‘காலனி’
‘அறம்’ திரைப்படத்துக்குப் பிறகு கோபி நயினார் இயக்கிய ‘மனுஷி’ திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான அந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். இந்த நிலையில் கோபி நயினாரின் அடுத்த படமாக ‘காலனி’ உருவாகியுள்ளது.
படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். மோஷன் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.
படப்பிடிப்பு நிறைவு
தற்போது ‘காலனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
