சென்னை: இயக்குநர் இளன் இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்’ இன்று வெளியாகியுள்ளது.
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இளன், தற்போது புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சான்வி மேகனா நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 21-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ராசிட்டி’ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியாகியுள்ளது.
