சென்னை: ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், அபிஷனின் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ள நிலையில், அறிவிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.