சென்னை : தான் நடித்துள்ள ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகளை சசி குமார் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் ‘மை லார்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சசிகுமார் தொடங்கினார். இதை புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சசிகுமார் இயக்குனராக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மை லார்ட் படம் நிச்சயம் வெற்றி பெறும் எனப் படக்குழுவினர் தரப்பில் தெரிவித்தனர்.