சென்னை: காந்தாரா படத்தில் வரும் ஜரந்தய தெய்வா கோயிலில் நடிகர் விஷால் வழிபாடு செய்துள்ளார்.
நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல் நலம் தேறி மதகஜராஜா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் காந்தாரா படத்தில் வரும் ஜரந்தய தெய்வா கோயிலில் நடிகர் விஷால் வழிபாடு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“காந்தாரா படத்தைப் பார்த்து தான் இங்குள்ள தெய்வம் மற்றும் நேமோத்சவம் பற்றி நான் அறிந்தேன். துளுநாட்டில் நேமோத்சவத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நேற்று கொல்லூர் மூகாம்பிகைக்குச் சென்ற பிறகு இங்கு வந்தேன்” என்றார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் ‘காந்தாரா’. இந்த படத்தின் மூலம், ஜரந்தய தெய்வா கோயில் விழா பிரபலமடைந்தது.