ஹைதராபாத் : பிரபல பாடகியான கல்பனா தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனா இன்று இரவு திடீரென தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை சிறு வயதில் பாடியவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியில் நடுவராக கல்பனா பங்கேற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தற்கொலை முயற்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.