சென்னை: சினிமாதான் எனக்கு எல்லாமே. சாகும் வரை நடிப்பேன் என்று நடிகை பிரிகிடா தெரிவித்துள்ளார்.
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விழாவில் பேசிய அவர், தான் நடித்த பெரும்பாலான படங்கள் பழைய காலகட்ட பின்னணியுடன் இருப்பதால், 80 மற்றும் 90களில் பிறந்திருக்கலாமோ என்று அடிக்கடி நினைப்பதாக கூறினார்.
இந்த படத்தில் தனது பாட்டியை மனதில் வைத்தே நடித்ததாகவும், அந்த கதாபாத்திரம் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக சினிமாவுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.