சென்னை: ரூ.500 கோடி வசூலை நெருங்கும் கருப்பு… நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.
மே 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல் சாதனையாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.