சென்னை: கடந்த 2 ஆண்டுகளாகவே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும், பிறருக்கு வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளார்.
கொகைன் வகை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து ஒரு கிராம் போதைப்பொருள் மற்றும் கவர்களை பறிமுதல் செய்தனர். நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு மேலும் 10 வழக்குகள் போடப்பட்டன. 2023ம் ஆண்டு முதலே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.