சென்னை : நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள நிலையில், படத்தின் ‘காட் மோட்’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வேலை நாட்களிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கருப்பு’ திரைப்படத்தின் ‘காட் மோட்’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படம் விரைவில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.