சென்னை: ரஜினிகாந்த் நடித்த வேட்டைக்காரன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் போலீஸ் என்கவுன்டரை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் நாளை (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “லைகா புரொடக்ஷன்ஸ் கோரிக்கையை பரிசீலித்து, அக்டோபர் 10-ம் தேதி சிறப்பு காட்சியை ஒரு நாள் மட்டும் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை முடிக்க வேண்டும். நள்ளிரவு 2 மணிக்குள் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிடப்படலாம்.