சென்னை : ‘லெக் பீஸ்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்ரீநாத் இயக்கியுள்ள ‘லெக் பீஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. உன்னாலே உன்னாலே, உத்தமபுத்திரன் படங்களில் நடித்த ஸ்ரீநாத், முத்திரை படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை இயக்கிய அவர் தற்போது மூன்றாவது படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்ச் 7ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.