ஐதராபாத்: நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன், போலீஸ் விசாணைக்கு ஒத்துழைப்பேன். மீண்டும் ஒருமுறை மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து ரிலீஸ் ஆனதும் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அல்லு அர்ஜூன் கூறியதாவது: என்மீது அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நான் நலமாக உள்ளேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன், போலீஸ் விசாணைக்கு ஒத்துழைப்பேன். மீண்டும் ஒருமுறை மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அது துரதிருஷ்டவசமான நிகழ்வு. அது நடந்தவைக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.