முட்டையை பிரிட்ஜில் வைக்க கூடாது! ஏன் தெரியுமா ?
முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாதாரணமாக அறையின் வெப்பநிலையில் வைக்கும் முட்டைகளைவிட, விட, ப்ரிட்ஜில் வைத்திருக்கும் முட்டைகள் சீக்கிரத்தில் கெட்டு விடுமாம்.. அதாவது, முட்டையிலுள்ள கருவானது, பால் போல திரிந்துவிடும். அதேபோல, முட்டையின் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.
ஒருவேளை, நாம் கடையில் வாங்கிவரும் முட்டையில், சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருக்கலாம். இது தெரியாமல் நாம் முட்டையை ப்ரிட்ஜில் வைக்க நேரிந்தால், மற்ற முட்டைகளிலும் இந்த பாக்டீரியா பரவிவிடும். எந்த முட்டையில் பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நம்மாலும் கண்டுபிடிக்க முடியாது.. அதனால், முட்டைகளை எப்போதுமே ஃபிரிட்டிஜில் வைக்காமல் கிச்சனில் வைத்திருந்தாலே போதும்.