தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
தேங்காய் – ¼ கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
வெல்லம் – ½ கப்
தேங்காய் பால் – ½ கப்
நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:
அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாக பிசையவும். பின் பாதி மாவை தனியாக வைக்கவும். மீதமுள்ள மாவுடன் தேங்காய் துருவல் மற்றும் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக பிசையவும். கடாயில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டவும். இப்போது சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார் .