தயிரையும் வெங்காயத்தையும் ஒன்றாகச் சாப்பிடும்போது, அவை ஒவ்வாமை, வாயு, அமிலத்தன்மை மற்றும் வாந்தியை உண்டாக்குகின்றன. காரணம், தயிர் குளிர்ச்சியை ஏற்படுத்தும், வெங்காயம் எதிர்மாறாக உள்ளது. இதன் விளைவாக, இந்த இரண்டு உணவுகளையும் இணைப்பது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், நம்மில் பலர் கவனக்குறைவாக தயிர் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சாப்பிடுகிறோம்.
குறிப்பாக கோடையில் இந்த பழக்கம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பிரியாணி சாப்பிடும்போது சைடிஷாக அனைவரும் தயிர் வெங்காயம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறான காமினேஷன்.
தயிர் மற்றும் மீனின் கலவையும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது அஜீரணம் மற்றும் வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக, தயிர் சாப்பிடும் போது, அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும். அவற்றின் நன்மைகள் இருந்தபோதிலும், ஒன்றாக உட்கொண்டால், மீன் மற்றும் தயிர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தோல் பிரச்சினைகளை கூட ஏற்படுத்தும்.
மாம்பழம் உங்கள் உடலுக்கு சூடாக இருக்கும். அதேசமயம் தயிர் குளிர்ச்சியை அளிக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதால் தோல் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம். இதனாலேயே மாம்பழத்தை தயிருடன் சாப்பிடக்கூடாது.
நெய் தடவப்பட்ட புரோட்டா, சால்னா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை எல்லாரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது.
இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மை தழுவிக்கொள்வதற்கான காரணமும் இதுவே ஆகும்.