சென்னை: தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்க ஒரு எளிய வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கிராம்பு 4 எண்ணிக்கை
மிளகு 5 எண்ணிக்கை
கொஞ்சம் பால்
செய்முறை: முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களை சரியான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடாயில் கிராம்பு மற்றும் மிளகு இரண்டையும் எடுத்து மிதமான தீயில் பொன்னிறமாக (வாசனை வரும் வரை) வறுக்கவும்.
பிறகு வறுத்த இரண்டு பொருட்களையும் நன்றாக பொடித்து கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் சிறிது பாலை (இரண்டு டேபிள்ஸ்பூன்) எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும். இதனுடன் அரைத்த பொருட்களை சேர்த்து சூடாக்கவும்.
மேலும், இந்த மருந்தை மிதமான சூட்டில் நெற்றி மற்றும் மூக்கில் தடவி வந்தால், தலையில் உள்ள நீர் குறையும்.