மீனில் அதிக சுவையுடன் மருத்துவ நன்மைகள் உள்ள எம்பரர் மீன், பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ‘விலை மீன்’ என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில், பருமனான தோற்றம் கொண்ட இந்த மீன், வெப்பமண்டல கடல்களில் அதிகம் காணப்படுகிறது.இந்த மீன் பெரும்பாலும் பவளப்பாறைகளில் காணப்படுகிறது. பாசி மற்றும் சிறிய உயிரினங்களை உணவாகக் கொண்டு வளருவதால் இதன் சுவை தனித்தன்மையுடன் இருக்கும்.

உடலில் முள் இல்லாத அமைப்பு கொண்டதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உணவளிக்க முடிகிறது.இதன் சதை அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருக்கிறது. இதன் முக்கிய அம்சம், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடக்கமாக இருப்பது. இது இதய நலனுக்கும் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
மேலும், வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு உறுதி தருகிறது.பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் செனிலியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை வளர்க்கும் தன்மை கொண்டது.
இதனை குழம்பாக, பொறித்தும் அல்லது புட்டு வைத்து பலவகையாக சமைக்கலாம்.மீனவர்கள் இதனை அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். விலை ரூ.300 முதல் ரூ.400 வரை இருக்கும். குழந்தைகள் சுவைக்காகவே இந்த மீனை மீண்டும் மீண்டும் கேட்பார்கள் என்பது பொதுவான அனுபவம்.இந்த மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கும், சுவைக்கும் சிறந்த தேர்வாகும்.