தேவையானவை:
பச்சரிசி – 200 கிராம்
வெல்லம் – ½ கிலோ
தேங்காய் – 1 மூடி
ரஸ்தாளிப்பழம் – 2
நேந்திரம் பழம் -1
ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து மிஷினில் போட்டு சிறிது கரகரப்பான பதத்திற்கு அரைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் வெல்லக் கரைசலில் பச்சரிசியை மெதுவாகத் தூவி, கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையில் ரஸ்தாளிப் பழம், நேந்திரம் பழம், ஏலக்காய்த் தூள், சிறிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்து கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியில் ஊற்றி பொரித்தெடுக்கவும்.