தேவையானவை:
அவல் – 1 கப்
பொட்டுக்கடலை – ½ கப்
நெய் – ½ கப்
தேங்காய் – 1 மூடி
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10.
செய்முறை:
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து கடாயில் லேசாக வறுத்து மிக்ஸியில் மாவு பதத்திற்கு அரைக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். தேங்காய்த் துருவலை வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். முந்திரி பருப்பை அரைத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். பிரித்த மாவு, சர்க்கரை, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். நெய்யை சூடாக்கி, கலந்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி, சூடாக இருக்கும்போதே உருண்டையாக்கவும். சூப்பரான அவல் உருண்டை ரெடி.