தேவையானவை:
தர்பூசணி தோலில் இருக்கும் வெள்ளைப் பகுதி மட்டும் சீவி எடுத்தது – 2 கப், வரமிளகாய் – 5,
பெருங்காயம் – ஒரு துண்டு,
தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1 டீஸ்பூன், உப்பு, புளி, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நெய் + தேங்காய் எண்ணெய் கலந்து – தலா 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம், மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், தேங்காய் துருவலை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொண்டு, தர்பூசணி துண்டுகளை லேசாக வதக்கி எடுக்கவும். ஆறியவுடன் உப்பு, புளியுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.