தேவையான பொருட்கள்:
பொரி – 2 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் பொரியை எடுத்து அதில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற வைத்த பொரியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவைக் கொண்டு மெல்லியதாக தோசை ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் உற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பொரி தோசை தயார்.