சென்னை: சுண்டைக்காய் என்றாலே பாதிபேர் தெறித்துக் கொண்டு ஓடுவார்கள். கசக்கும் என்பதால். ஆனால் சுண்டைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. சுண்டைக்காயில் மணக்க மணக்க சாம்பார் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையானவை
துவரம்பருப்பு – 100 கிராம்
பச்சை சுண்டைக்காய் – 100 கிராம்
புளி – சிறிதளவு
சாம்பார் தூள் – 3 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் 4 விசில் விட்டு வேகவத்து கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும்.
புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்,சீரகம் பெருங்காயத்தூளையும் போட்டு தாளித்து சாம்பாரில் சேர்த்தால் சுவையான, மணக்க, மணக்க சுண்டைக்காய் சாம்பார் ரெடி.