சென்னை: ருசிக்க ருசிக்க இன்னும வேணும், இன்னும் வேணும் என்று குழந்தைகள் வாங்கி சாப்பிடும் வகையில் இனிப்பு உளுந்து வடை செய்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போதே அரிசி மாவும் உப்பும் சேர்த்து அரைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, பிசுபிசு பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாவில் போட்டு ஊற விடவும்.
சிறிது நேரம் கழித்து பாகில் இருந்து வடையை எடுத்து பரிமாறவும். ருசி பிரமாதம் போங்க.