தேவையானவை :
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
பட்டை – 1
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கிராம்பு – 2
கல்பாசி – சிறிது க
றிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தக்காளி – 2 (அரைத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மட்டன் கொத்துக்கறி – 1/2 கிலோ
தண்ணீர் – தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை – 1/2
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். * பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். * அடுத்து மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவி விட்டு, வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். * பின் அதில் ஒரு பெரிய டம்ளர் நீரை ஊற்றி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். * 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கைமாவைக் கிளறி, அத்துடன் சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான மதுரை மட்டன் கைமா தயார்.