சென்னை: பீட்ருட் பொறியலாக செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள், அதனால் அவர்களுக்காக அதில் அல்வா செய்து கொடுங்கள் அப்போது விரும்பி சாப்பிடுவார்கள், உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். சரி பீட்ருட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
பீட்ருட் – 1/2 கிலோ
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
நெய் – 200 கிராம்
பசும்பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
கிஸ்மாஸ் பழம் – 50 கிராம்
செய்முறை: முதலில் பீட்ருட்டை துருவி கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அதி முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மஸ் பழம் போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதே நெய்யில் துருவி வைத்திருக்கும் பீட்ருட்டை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள், அதனுடன் பால் சேர்த்து நன்றாக பாலும், பீட்ருட் ஒன்றாக வேகவிட வேண்டும்.
ஒரு 15 நிமிடம் நன்றாக வெந்து பால் வற்றி வரும்பொழுது சர்க்கரையை சேர்த்து கிளறி விடுங்கள். சர்க்கரை கரைந்து இனிப்பு ஒன்று சேரும்வரை மிதமான சூட்டில் வேகவிட வேண்டும்.பிறகு கிஸ்மஸ் பழம், முந்திரிப்பருப்பு போட்டு கிளறி இறக்கிவிடுங்கள். அவ்ளோதா சுவையான பீட்ருட் அல்வா ரெடி!