சென்னை: சத்துமாவில் பர்பி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்தாண்டு தீபாவளி விழாவை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்
தேவையானவை: சத்து மாவு – 2 கப், பால் பவுடர் – 1 கப், சர்க்கரை – 1 – 1/2 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் சத்து மாவைப் போட்டு மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அத்துடன் பால் பவுடரைச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் சர்க்கரையை போட்டு அத்துடன் அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரைக் கொதித்து மேலே குமிழ் வரத்தொடங்கியதும், அடுப்பை தணித்து சிறு தீயில் வைத்து, மாவைக் கொட்டிக் கிளறவும்.
மாவு கெட்டியாக ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
சிறிது ஏலக்காய் தூள் அல்லது வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கலாம். முந்திரி, பிஸ்தா போன்றவற்றையும் சேர்க்கலாம். அருமையான சத்து மாவு பர்பி ரெடி.