சென்னை: உணவுகளுக்கும் தொட்டுக்கொள்வதற்கு சிறந்த உணவாகவும் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகவும் இருப்பது புதினா துவையல். இந்த புதினா துவையலை சுவை மிக்கதாக எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: புதினா இலைகள் – 1 கோப்பை உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் – 10 புளி – ஒரு சிறிய உருண்டை அளவு வெல்லம் ( தேவைப்பட்டால் ) – 1 தேகரண்டி தேங்காய் (தேவைப்பட்டால் ) – 2 மேஜை கரண்டி உப்பு – 1/2 அல்லது 1 தேக்கரண்டி –
செய்முறை அடுப்பில் தீ மூட்டி, அதில் ஒரு கடாய் வைத்து உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதில் புளியையும், நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகளையும் ஒன்றாக போட்டு 1 நிமிடம் நேரம் புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும். பின்பு அடுப்பிலிருந்து புதினா வதக்கலை இறக்கி அதை ஆற விட்டு தேங்காய் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்க புதினா துவையல் தயார்.
இந்த முறையில் புதினா துவையலை செய்யும் போது, இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் நன்றாக இருக்கும். தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.