சென்னை: மழைக்காலம் ஆரம்பம் ஆகிவிட்டடது. வெப்பச்சலனத்தால் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பருவகால நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு உணவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களுக்காக முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு செய்முறை.
தேவையானவை
கோதுமை – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு.
செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். அருமையான உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் முளைக்கட்டிய கோதுமை புட்டு தயார்.