.புதுடெல்லி: ரஞ்சித் கோப்பை தொடரில் 1 ரன்னில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது கேரளா கிரிக்கெட் அணி.
2024 – 2025 ரஞ்சி கோப்பை தொடரின் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மிர் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப்போட்டி சமனில் முடிந்ததால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கேரளா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மிர் 280 ரன்கள் அடித்த நிலையில், 281 ரன்கள் சேர்த்த கேரளா அணி 1 ரன் வித்தியாசத்தில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜம்மு 399, கேரளா 295 ரன்கள் அடித்தன.