ஈடன் கார்டன்: ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 28வது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தாவிற்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 19.4 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், 2026 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.
கொல்கத்தாவில் ரிங்கு சிங் அரைசதம் விளாசினார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.