மும்பை: இன்று தனது 53 பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்.
இன்று 53-வது பர்த்டே. தனது வீட்டின் வாசலில் ரசிகர்களின் முன்னிலையில், கேக் வெட்டி மனைவி அஞ்சலிக்கு ஊட்டி அவர் பர்த்டே கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வின் போது, சச்சினின் தீவிர ரசிகரான ஒருவர் உடலில் தேசிய கொடி வண்ணத்தை பூசிக் கொண்டு, கையில் தேசிய கொடியை அசைத்தபடி, சங்கு முழங்கி தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்.