பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதுகிறது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.
பெங்களூர் அணியில் பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்). டிம் டேவிட். ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா. ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், சுயாஷ் ஷர்மா, ஹேசில்வுட்.
குஜராத் அணியில் சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா. ஷாருக்கான், ரஷித் கான். கசிசோ ரபடா, அசோக் ஷர்மா. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.