துபாய் ‘இது எங்க கோட்ட..’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஹை வோல்டேஜ் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியை காண, எண்ணற்ற இந்திய ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கூடி இருக்கிறார்கள்.
அவர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி, மோளம் அடித்து, டான்ஸ் ஆடி உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள். என்ன நடந்தாலும், இப்போட்டியில் இந்தியா தான் வெல்லப் போகிறது என அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.