மலேசியா : மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.
இதனிடையே நேற்று முன்தினம் (டிச.6) 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன. மலேசியாவில் அஜித்தை காண நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறது. இந்நிலையில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.