உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், இன்று (ஜனவரி 29, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தை அமாவாசை என்பதால், அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட சங்கமம் பகுதியில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக புனித நீராடலுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சம்பவம் குறித்து பேசினார்.