புதுடில்லி: டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் ரெண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தான் என தெரியவந்துள்ளது.
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜ் செல்லும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால், 3 ரயில்களில் செல்ல வேண்டிய பயணிகள் ஒரே ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த சோக நிகழ்வு நடந்ததாக கூறப்பட்டுகிறது.