உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆண்டு விழாவின்போது தனியார் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் ஓட்டல் ஒன்றில் ஆண்டு விழா கொண்டாடியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில மாணவர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மாணவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.